கார்த்திக்கையே குழப்பும் மா. செயலாளர்கள்!
சென்னை: தனது அரசியல் நடவடிக்கையால் (?) மக்களைக் குழப்பி வரும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் தன்னைக் குழப்பி வரும் (!!) மாவட்டச் செயலாளர்களை நீக்க முடிவு செய்துள்ளாராம்.
பார்வர்ட் பிளாக் கட்சியிலிரு்நது நீக்கப்பட்ட பின்னர் அதிரடியாக கார்த்திக் ஆரம்பித்த கட்சிதான் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி. பெயரில்தான் நாடாளும் என்று உள்ளது. ஆனால் ஒரு ஊரில் கூட இந்தக் கட்சி இருப்பதாகத் தெரியவில்லை.
கட்சி கார்த்திக் கட்டு்பபாட்டில் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அங்கு நிகழ்வுகள் உள்ளன.
கடந்த 14ம் தேதி திருப்பூரில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நாடாளும் மக்கள் கட்சி செயலாளர்கள் கூடி ரகசியமாக ஆலோசித்தனர். இதனால் கார்த்திக் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுபோல கட்சிக்கு விரோதாக செயல்படுவோர் நீக்கப்படுவர் என்று கார்த்திக் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் மதுரையில் நாளை மறு நாள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் கார்த்திக்.
அப்போது கட்சி வளர்ச்சிக்குப் பாடுபடாமல், குழப்பம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் மாவட்டச் செயலாளர்களை நீக்கி விட்டு புதிய செயலாளர்களை கார்த்திக் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
மேலும் தற்போது 12 மாவட்டங்களுக்கு மட்டுமே செயலாளர்கள் உள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கம் இந்தக் கூட்டத்தில் செயலாளர்கள் அறிவிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியினருக்கு புத்துயிர் கொடுத்து, புத்துணர்ச்சியுடன் அவர்களை செயல்பட வைக்க கார்த்திக் திட்டமிட்டிருப்பதாகவும் கட்சியினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications