வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு தேவை-ராமதாஸ்
வேலூர்: வன்னியர் சமுதாயத்துக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமையில் இருக்கிறோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
வேலூரில் பாமக பிரமுகர் பூண்டி நடராஜன் இல்லத் திருமண விழாவில் அவர் பேசுகையில்,
தேர்தலில் வெற்றிபெறும் எண்ணம் ஈடேறவில்லையே என்ற வருத்தம் நமக்கு ஏற்பட்டிருந்தாலும் இதை தற்காலிகமான வருத்தமாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பணம் எதையும் செய்து விடும். அதைக் கொண்டு தான் அவர்கள் வென்றார்கள்.
தமிழகத்தில் மிகப் பெரியதாக இருக்கிற நம் வன்னியர் சமுதாயம் பின்தங்கி இருப்பதைப் பற்றி நம்மைத் தவிர வேறு யாரும் நினைத்து பார்க்கவில்லை.
உயர் நீதிமன்றத்தில் 47 நீதிபதிகள் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒவ்வொரு சமுதாயத்தையும் சேர்ந்தவர்கள் நான்கு, ஐந்து பேர் என்று இருக்கும்போது மிகப்பெரிய சமுதாயமாக இருக்கிற நமது சமுதாயத்திற்கு ஒரே ஒருவர் தான் நீதிபதியாக இருக்கிறார். இதுதான் சமூக நீதியா? என்று கேட்பதற்கு இந்த ராமதாசை விட்டால் வேறு யாரும் இல்லை.
1983ம் ஆண்டில் நெற்றியிலும் மார்பிலும் முதுகிலும் பட்டை நாமம் போட்டுக் கொண்டு என்னுடன் 1,000 பேரை சென்னை மெரீனா கடற்கரையில் உட்கார வைத்துக்கொண்டு எங்களுக்கு பட்டை நாமம் தானா?' என்று கேட்டு போராட்டம் நடத்தினோம். அந்த போராட்டத்தை இன்றைக்கும் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
கோட்டையில் அமைச்சர்களுக்கு அடுத்தபடியாக அதிகாரத்துடன் இருப்பவர்கள் அரசுத்துறைச் செயலாளர்கள் தான். ஆனால், பாழ்படுத்தப்பட்ட. ஏமாற்றப்பட்ட. வஞ்சிக்கப்பட்ட இந்த சமுதாயத்திற்கு ஒரு செயலாளர் கூட அங்கே உட்கார்ந்து ஆட்சி செய்யவில்லை.
முக்கிய பதவிகளில் யாருமே இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போனால் என்ன பயன்?. ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட கதையை எத்தனை ஆண்டுகளாக சொல்வது?
1987ம் ஆண்டில் பூண்டி நடராஜன் உள்பட 1 லட்சம் பேர் ஜெயிலுக்கு சென்றனர். ஒரே நாளில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் விளைவாக 20 சதவீத இட ஒதுக்கீடு நமக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 107 ஜாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கொண்டு வந்ததன் மூலம் வன்னியருக்கு 10 சதவீதம் கூட இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை.
தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு நாம் போராடினோம். ஆனால் கிடைக்கவில்லை. இதை எங்கே போய் சொல்வது?, யாரிடம் சென்று முறையிடுவது?, வேங்கடமலையில், மேற்கு தொடர்ச்சி மலையில், இமயமலையில் சென்று முட்டிக் கொள்வதா?, யாரிடம் சொன்னால் விமோசனம் கிடைக்கும்?. ஒன்றும் கிடைக்காது.
இந்தப் பெரிய சமுதாயம் அழிந்து போக வேண்டும், எல்லா நிலைகளிலும் அவர்கள் அழிய வேண்டும் என்று நினைக்கிற சக்திகளின் ஆர்ப்பரிப்பு, ஆரவாரம், கூச்சல், பெருங்கூச்சல், கொட்டம் ஆகியவை இன்றைக்கு அதிகமாகி இருக்கிறது.
இதை எல்லாம் நம்முடைய பெரியவர்கள் உணர்கிறார்கள். நினைத்துப் பார்க்கிறார்கள். எவ்வளவு பெரிய சமூகத்திற்கு சேவை செய்தாலும் எத்தனை பெரிய திட்டங்களை கொண்டு வந்தாலும் '(அமைச்சர்) வேலு, நீ யார்' என்று நம்மைக் கேட்கிற நிலைமையை தேர்தலில் நாம் பார்த்தோம்.
இதை இந்த மாவட்டத்தில் இருக்கிற மிக மிக பின் தங்கிய மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களை உயிர்ப்பிக்க வேண்டும். எழுப்ப வேண்டும். அதைச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications