ரஷ்யாவில் இந்திய தொழிலதிபர் மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இது போன்ற ஒரிரு சம்பவங்கள் கனடாவிலும் நடந்தன.

இந்நிலையில் தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இது இனவெறி தாக்குதல் அல்ல. கொள்ளையர்கள் அவரிடம் இருந்த பணத்தை பறிப்பதற்காக தாக்குதல் நடத்தியிருப்பதாக ரஷ்ய போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மாஸ்கோ நதிக்கரையில் சென்று கொண்டிருந்த அந்த இந்திய தொழிலபதிபரை சூழ்ந்து கொண்ட சிலரை அவரை கடுமையாக தாக்கி நிலைகுலைய செய்தனர். பின்னர் அவர் கையில் வைத்திருந்த பையை பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.

இதில் பாதிக்கப்பட்ட இந்திய தொழிலதிபரின் விவரங்களை தெரிவிக்க ரஷ்ய போலீசார் மறுத்துவிட்டனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக ரஷ்யாவின் அண்டை நாடுகளில் பலருக்கு வேலை போய்விட்டது. வேலை தேடி ரஷ்யா வரும் அவர்கள் வேறு வழியில்லாமல் இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தான் சமீபத்தில் ரஷ்யாவின் மூன்று முன்னணி நடிகைகளிடம் வரிசையாக ஹேன்ட் பேக்குகளை கொள்ளையடித்தவர்கள் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+