நம் எதிரி இந்தியா அல்ல, தலிபான் தான்: சர்தாரி
லண்டன்: பாகிஸ்தானின் மிகப் பெரிய எதிரி தலிபான்தான். இந்தியா அல்ல என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் கூறியுள்ளார்.
சமீபத்தில் கூட இதே கருத்தை அவர் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், பிரஸ்ஸல்ஸ் சென்றிருந்த அவர் அங்கு ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அவர்களிடையே அவர் பேசுகையில், பாகிஸ்தானின் உண்மையான எதிரி தலிபான்கள்தான். இந்தியா எங்களது எதிரி அல்ல. இந்தியாவால் எங்களுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை.
ராணுவ ரீதியாக இந்தியா எங்களுக்கு மிரட்டலாக இல்லை. அதேபோல பாகிஸ்தானால் இந்தியாவுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை. உண்மையான எதிரி, மிரட்டல் தலிபான் தீவிரவாதிகள்தான்.
இந்தியா, பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்திற்கே பெரும் மிரட்டலாக தலிபான்கள் உள்ளனர். எனவேதான் நாங்கள் தற்போது தலிபான்களை குறி வைத்து செயல்பட்டு வருகிறோம்.
கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த சர்வாதிகார அதிபர் (முஷாரப்) இதை சரியாக கணிக்கவில்லை. கவனிக்கவும் இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அரசு அதுகுறித்து கவனத்துடன் உள்ளது என்றார் அவர்.
இதேபோன்ற கருத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications