தமிழ் எம்.பிக்களின் சுதந்திரத்தைப் பறிப்பது நல்லதல்ல - தமிழ் மக்களின் நம்பிக்கை போய் விடும்: ரணில்
கொழும்பு: நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சுதந்திரமாகச் செயற்படும் உரிமை வழங்கப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் இந்த நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்து விடுவர். நாடாளுமன்றம் மீது நம்பிக்கையற்ற இன்னொரு புதிய குழு உருவாகிவிடும் என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. பத்மநாதனுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நெருக்கடியான ஒரு காலகட்டத்தில்தான் பத்மநாதன் எம்.பியாகி இந்த நாடாளுமன்றுக்கு வந்தார். அவர் ஜனநாயகத்தை மதித்து நின்றவர். அவர் நாடாளுமன்றத்தில் முழு நம்பிக்கை வைத்திருந்தார்.
நாடாளுமன்றத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று நினைத்திருந்த ஒரு காலகட்டத்தில்தான் அவர் நாடாளுமன்றம் நுழைந்தார். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் ஊடாகத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர் செயற்பட்டார்.
மக்களுக்குத் தன்னால் முடிந்த சேவையைச் செய்யும் நோக்கில் அவர் பல கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றார். நாடாளுமன்றத்தின் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றம் வந்திருக்கின்றனர்.
அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்படும் உரிமை வழங்கப்படல் வேண்டும். அப்படியானதொரு நிலைமை ஏற்படா விட்டால் தமிழ் மக்கள் இந்த நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடுவர் என்றார் அவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications