நிருபர் மீது தாக்குதல் - துரித நடவடிக்கை எடுத்த முதல்வர், துணை முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் பாராட்
கரூர்: ராமநாதபுரம் மாவட்ட தமிழக அரசியல் வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், துரித நடவடிக்கை எடுத்த முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கரூர் பத்திரிகையாளர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்படுள்ளது.
ராமநாதபுர மாவட்ட தமிழக அரசியல் என்ற வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் என்கிற ரவிச்சந்திரன் ராமநாதபுரம் நகர திமுக செயலாளர் ரத்னம் மற்றும் சிலரால் காரில் கடத்தப்பட்டுள்ளார். மேலும் நிருபர் கிஷோரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த செயலுக்கு சென்னை பிரஸ் கிளப், கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிருபர் கிஷோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறையினரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக முதல்வர் கருணாநிதி பாராபட்சம் பாரமல் கடும் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் தி.மு.க., நகரச் செயலர் ரத்தினம் பிடியில் இருந்த நிருபர் கிஷோர் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையின் பேரில் விடுவிக்கப்படடுள்ளார். மேலும் நகரச் செயலர் ரத்தினம் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம் நகர தி.மு.க., செயலர் ஆர்.ஜி.ரத்தினம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் தி.மு.க., உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.
பத்தரிக்கையாளர்களின் உணர்வுகளை அறிந்து புரிந்து தக்க தருணத்தில் நேர்மைக்கு துணை நின்று நிருபர் கிஷோரை உயிருடன் மீட்ட தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், ரத்தினம் மீது உடனே நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications