மைக்கேல் ஜாக்சனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
லாஸ் ஏஞ்சலெஸ்: பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜாக்சனின் திடீர் மறைவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் அட்டாப்சி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனைகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழித்தே முடிவுகள் தெரிய வரும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், சோதனைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜாக்சனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து லாஸ் ஏஞ்சலெஸ் கவுன்டி உதவி தலைமை தடயவியல் அதிகாரி எட் வின்டர் கூறுகையில், ஜாக்சனின் உடல் எங்களது அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டது. அவரது குடும்பத்தினரின் கோரிக்கைப்படி அவரது உடல் பெயர் சொல்லப்படாத இடம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி அந்த இடத்தின் பெயரை நாங்கள் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம் என்றார் அவர்.
தலைமறைவான டாக்டர் கண்டுபிடிப்பு..
இதற்கிடையே, ஜாக்சனை தொடர்ந்து அருகில் இருந்து கவனித்துக் கொண்டவரும், ஜாக்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது உடன் இருந்தவருமான டாக்டர் தலைமறைவாகி விட்டதாக முதலில் கூறப்பட்டது.
அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த டாக்டர் தற்போது போலீஸ் வசம் வந்துள்ளார்.
ஜாக்சனுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு ஒரு ஊசியை அந்த டாக்டர் போட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் டிஎம்எஸ் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து அந்த டாக்டரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த டாக்டரின் இருப்பிடத்தை போலீஸார் கண்டுபிடித்து அவரை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
அவர் என்ன ஊசி போட்டார், ஓவர் டோஸ் மருந்தைக் கொடுத்து விட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications