தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாது - அமைச்சர் கூறுகிறார்
சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்ட 5 பேரில் 2 பேர் குணமடைந்து விட்டனர் என்று கூறியுள்ளார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீ்ர்செல்வம்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய டாக்டர்கள்தான் பெரிய அளவில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருமான வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500 மட்டுமே கட்டணம்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் மட்டும் ரூ.10 கோடிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மருத்துவ தொழில் புனிதமானது. டாக்டர்கள் போராட்டங்களை தவிர்த்து சேவை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 5 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க உள்ளன. இதில் தர்மபுரி மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்படுகின்றன. பன்றிக் காய்ச்சல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வருகிறது. இதனால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அச்சப்படவும் தேவையில்லை. தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரில் 2 பேர் குணமடைந்துவிட்டனர் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications