வட மாநிலங்களில் பெய்யத் தொடங்கியது மழை
டெல்லி: கடும் வெயிலில் சுருண்டு கொண்டிருக்கும் வட மாநிலங்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அங்கு நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
டெல்லி, பீகார், ஹரியானா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
பீகாரில் நேற்று முதலில் மழை பெய்யத் தொடங்கியது. அப்படியே வட மாநிலங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இது பருவ மழையின் தொடக்கம் என வானிலை மையத் தகவல்கள் கூறுகின்றன.
கடும் வெயிலில் சுருண்டு கொண்டிருந்த தலைநகர் டெல்லியில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல பீகாரில் நேற்று பிற்பகலுக்கு மேல் கன மழை பெய்தது. இதனால் தலைநகர் பாட்னாவில் பல இடங்கள் வெள்ளக்காடானாது.
பீகாரின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நல்ல மழை பெய்யும் என்று பீகார் வானிலை ஆய்வ மைய அதிகாரி லஷ்கர் தெரிவித்தார்.
இதேபோல ஜார்க்கண்ட், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் மழை பெய்துள்ளது.
மழை உரிய காலத்தி்ல பெய்யத் தவறியதால் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் கடும் வறட்சியில் மூழ்கின. டெல்லியில் மின்பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications