கடன்-வங்கி மானேஜரை உதைத்த காங். எம்பி
ஹைதராபாத்: தனது சிபாரிசு கடிதத்துக்கு கடன் கொடுக்காத வங்கி மானேஜர் ஒருவரை ஆந்திர எம்.பி ஒருவர் அடித்து உதைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலம் நாகர் கர்னூல் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் ஜெகன்நாத். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெகன்நாத் தனது பகுதி விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டேர் ஜெகன்நாத்தை சென்று சந்தித்து தங்களுக்கு கடன் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
அவர் அப்பகுதியில் உள்ள கிராமின் விகாஸ் வங்கிக்கு பரிந்துரை கடிதம் ஒன்று கொடுத்துள்ளார். ஆனால், அவரது பரிந்துரை கடிதத்துடன் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை பார்த்த வங்கி மானேஜர் ரவீந்தர் ரெட்டி கடன் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதை தொடர்ந்து அவர்கள் மீண்டும் எம்.பி.ஜெகன்நாத்தை சந்தித்து நடந்ததை கூறியுள்ளனர். இதையடுத்து ஆத்திரமடைந்த எம்.பி. நேரடியாக அந்த வங்கிக்கு சென்று தனது சிபாரிசு கடிதத்துக்கு கடன் கொடுக்க மறுத்த வங்கிக்கு சென்றார்.
நான் சொன்னவர்களுக்கு என் கடன் கொடுக்கவில்லை. இது என்ன உன் குடும்ப வங்கியா? என அவரை சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார்.
பின்னர் மானேஜரை பொது மக்கள் முன்னிலையில் போட்டு அடித்து உதைத்துள்ளார். வலி தாங்காமல் மானேஜர் சத்தம் போட்டு அலறியுள்ளார். அப்போது ஜெகன்நாதன் எம்.பி.யின் ஆத்திரம் தீரவில்லை. அவரை தொடர்ந்து தாக்கியுள்ளார்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த எம்எல்ஏ ராமலு என்பவர் அந்த எம்.பி.யை அழைத்து கொண்டு வெளியேறினார். இது தொடர்பாக பிரதமரிடம் புகார் செய்ய போவதாக அடி வாங்கிய மானேஜர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications