கண்ணப்பன் சகோதரர் தாக்கப்பட்ட வழக்கு-டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனின் சகோதரர் செந்தாமரை தாக்கப்பபட்டு, பணம் பறிக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளிக்குமாறு மதுரை உயர் நீதிமன்ற கிளை தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிவகங்கை அருகே அதப்படக்கியை சேர்ந்தவர் செந்தாமரை. இவர் கண்ணப்பனின் சகோதரர் ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
நாடாளுமன்ற தேர்தலில் எனது சகோதரர் கண்ணப்பனுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தேன்.
அப்போது, மே 12ம் தேதி இளையான்குடி சென்று விட்டு திரும்பும் போது திமுக ஒன்றிய செயலாளர் மதியரசன், தொடக்க விவசாய கூட்டுறவு வங்கி நிர்வாகி உதயகுமார் தலைமையில் 3 கார்களில் வந்த சிலர் என்னை தாக்கி, எனது காரில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை திருடி சென்று விட்டனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் 5 ஆயிரம் ரூபாயை மட்டும் திருடி சென்றதாக வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்எஸ் ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து பதில் அளிக்க தமிழக டிஜிபி, சிவகங்கை எஸ்பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications