தமிழகத்தில் 25 லட்சம் போலி ரேசன் கார்டுகள்!
சென்னை: தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 25 லட்சம் போலி ரேசன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் வேலு கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அவர் அளித்த பதில்:
ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ரேசன் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் கட்டமாக 60 சதவீத அரிசியும், 2வது கட்டமாக 40 சதவீத அரிசியும் வழங்கப்படுகிறது.
முதலில் 10 கிலோ அரிசியும், அடுத்த கட்டமாக 10 கிலோ அரிசியும் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. சிலர் முதலில் 10 கிலோ கொடுத்துவிட்டு 2வதாக வரும் அரிசியை ரேசன் ஊழியர்கள் கடத்துவதற்கு தந்துவிடுவதாக புகார் வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் தவறு செய்த 29 விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு இது போன்ற குற்றங்கள் குறைந்துள்ளன.
கோவை, கன்னியாகுமரி, நெல்லை போன்ற பிற மாநில எல்லைப் பகுதிகளில் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் அரிசி கடத்தல் தொடர்பாக 4,060 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 135 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்பெல்லாம் அரிசி பறிமுதல் செய்தல், டிரைவர்- கிளீனர் மீது வழக்கு போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால் தற்போது லாரிகளின் பெர்மிட் ரத்து செய்வது, டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்வது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அரிசி எங்கிருந்து கடத்தப்பட்டது என்பதை அறிந்து அதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அரிசி கடத்தலில் ஈடுபட்ட 371 லாரிகளின் பெர்மிட்டை ரத்து செய்யவும், 208 டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்யவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொது மக்களின் பிரதிநிதிகள் ரேசன் கடைகளில் நேரடியாக ஆய்வு செய்யலாம். கட்டுப்பாட்டு அறையில் புகார் செய்யலாம். அதன் பிறகும் நடவடிக்கை இல்லையெனில் என்னிடம் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
30 மாவட்டங்களில் 25 லட்சம் போலி ரேசன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை, திருச்சி, சென்னை அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தணிக்கை நடைபெற்று வருகிறது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications