பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாதம்-சட்டசபையில் சுவாரஸ்யம்

சட்டசபையில் இன்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மானிய கோரிக்கைகளை அமைச்சர் கீதாஜீவன் தாக்கல் செய்தார்.
அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், அகில இந்திய அளவில் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆதரவாக உள்ளது.
இன்று சமூக நலத்துறை சார்பாக தாக்கல் செய்யப்படும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் பெண் உறுப்பினர்களே பங்கேற்கிறார்கள். அதற்கு பெண் அமைச்சர் பதில் சொல்ல இருக்கிறார் என்றார்.
இதையடுத்து மூத்த உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் யசோதா, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை வழி நடத்தினார். விவாதம் தொடங்கியது.
முதலில் அதிமுக உறுப்பினர் பதர் சயீத் பேசுகையில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். தமிழக சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.க்கள் பேச 33 சதவீத கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து ராணி வெங்கடேசன் (காங்), ராணி (தி.மு.க.), சக்தி கமலம்மாள் (பா.ம.க.), லீமா ரோஸ் (மார்க். கம்யூ), பத்மாவதி (இந்திய கம்யூ), சங்கரி நாராயணன் (தி.மு.க.), ராம ஜெயம் (அ.தி.மு.க.) காயத்ரி தேவி (காங்), ஆகியோர் பேசினார்கள்.
விவாதத்திந் முடிவில் கீதா ஜீவன் பதிலளித்தார்.
இந்தியாவிலேயே பெண்கள் மட்டுமே பங்கேற்ற முதல் சட்டசபைக் கூட்டம் என்ற வரலாற்றுப் பெருமையை இந்தக் கூட்டம் பெற்று விட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications