வணங்காமண்-சென்னைக்குள் நுழைய அனுமதி

ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கேப்டன் அலி என்ற கப்பலுக்கு வணங்காமண் என பெயர் சூட்டி சுமார் 884 டன் எடை கொண்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.
கடந்த மாதம் 4ம் தேதி இலங்கை வந்த அந்த கப்பலில் ஆயுதங்கள் இருக்கலாம் என கூறி இலங்கை அரசு அங்கிருந்து வெளியேற்றியது. இதையடுத்து சென்னை நோக்கி வந்த கப்பலுக்கு இந்திய கப்பற்படையும் சோதனை கொடுத்தது. அந்த கப்பலை சென்னை துறைமுகத்துக்கு வெளியே நடுக்கடலில் நிறுத்தி வைத்தது.
இதையடுத்து வணங்காமண் கப்பலை சென்னைக்கு துறைமுகத்துக்கு கொண்டு வர அனுமதி வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் மனிதாபிமான நடவடிக்கையாக இந்த கப்பலை சென்னை துறைமுகத்துக்கு வர அனுமதி அளிப்பதாக மத்திய கப்பல்துறை போக்குவரத்து அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவி்த்துள்ளார்.
இதை தொடர்ந்து சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் கேப்டன் சுபாஷ் குமார் கூறுகையில்,
வணங்காமண் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதை நான்காவது தளத்தில் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கப்பல் இங்கு வந்தவுடன் அதில் இருக்கும் பொருட்களை உள்ளூர் போலீசாரும், கப்பற்படையும் சோதனையிடுவார்கள்.
அதன் பின்னர் இந்த பொருட்கள் வேறொரு கப்பல் மூலம் இன்னும் நான்கு நாட்களில் கொழும்பு அனுப்பி வைக்கப்படும் என்றார் சுபாஷ் குமார்.
அங்கிருந்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்கு வினியோகிக்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications