Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பால் உற்பத்தியில் தமிழகம் பெரும் பின்னடைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பால் உற்பத்தியில் தமிழகம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. தேசிய அளவில் 2வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பல்வேறு பால் கூட்டுறவு சங்கங்கள், கிராம கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம், தமிழ்நாடு பால் கூட்டுறவு இணையம் என மூன்றடுக்கு முறையில் செயல்பட்டு வருகின்றனர்.

7000 கிராம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களும், 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களும், சென்னையில் தமிழ்நாடு பால் கூட்டுறவு இணையமும் உள்ளன.

தமிழக மக்களின் மொத்த பால் தேவையான ஒரு கோடி லிட்டரில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 25 லட்சம் லிட்டர் பால்தான் கிடைக்கின்றன. மீதமுள்ள 75 லட்சம் லிட்டர் தேவை தனியார் பால் நிறுவனங்கள் மூலம் பூர்த்தியாகிறது.

பால் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் 2வது இடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அது 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து குஜராத் முதலிடத்தில் நீடிக்கிறது. 2வது இடத்தை மகாராஷ்டிராவும், 3வது இடத்தை கர்நாடகமும் பெற்றுள்ளன.

ஏன் இந்த நிலை என்று பால் உற்பத்தியாளர்களிடம் கேட்டால், உற்பத்தி செலவைக் காட்டிலும் பாலின் கொள்முதல் விலை குறைவாக உள்ளது. உற்பத்தி செலவு என்று பார்த்தால் தீவனங்கள், வேலையாட்கள் கூலி ஆகியன பல மடங்கு உயர்ந்துவிட்டன.

விலை நிர்ணயத்தில் அரசு தலையீடு...

தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாலின் கொள்முதல் விலை மாநில அரசின் தலையீடு இல்லாமல் உற்பத்தியாளர்களே நிர்ணயம் செய்கின்றனர்.

தமிழகத்தில் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால் (லிட்டருக்கு பசும் பால் ரூ.13, எருமைப் பால் ரூ. 18) பால் உற்பத்தி செய்வதில் இருந்து பலர் பின்வாங்கி வருகின்றனர்.

ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கறவை மாடு வாங்குவதற்கு அரசு 30 சதவீதம் மானியத்துடன் நிதி உதவி செய்து வருகிறது. இதனால் நல்ல கறவை மாடுகள் எந்த மாநிலத்தில் கிடைத்தாலும் அந்த மாநில பால் உற்பத்தியாளர்கள் விட்டு வைப்பதில்லை.

தமிழக மாடுகளை வைத்து முன்னேறிய கர்நாடகம்...

குறிப்பாக தமிழத்தில் இருந்து நல்ல நிலையில் உள்ள கறவைமாடுகளை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றுவிடுகின்றனர். இங்கு ரூ. 20000 வரை விலை போகும் கறவைமாடுகளுக்கு அவர்கள் ரூ.30000 வரை விலை தருவதால், வேறு வழியில்லாமல் விற்று விடுகின்றனர்.

பால் உற்பத்தியை பெருக்குவது, உற்பத்தியாளர்களுக்கு நல்ல கொள்முதல் விலை பெற்று தருவது, கால்நடைகளை முறையாக பராமரிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு நிதியுதவி செய்வது தேசிய பால்வள வாரியத்தின் முக்கியப் பணியாகும். இதன் தென்மண்டல அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வந்தது.

இந்த அலுவலகம் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு நிதியுதவி செய்து வந்தது.

தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களுக்குதான் உதவி செய்வது என்று இந்த வாரியம் கொள்கை முடிவு எடுத்துள்ளதால் தமிழகத்துக்கு இந்த வாரியம் நிதியுதவி அளிக்க மறுத்து வருகிறது.

பெங்களூருக்கு மாறிய வாரியம்..

கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாததால் இந்த வாரியத்தில் மூலம் தமிழத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.120 கோடி (ஆண்டுக்கு) கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பால் உற்பத்தி பாதிப்புக்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

மேலும் சென்னையில் செயல்பட்டு வந்த இந்த மண்டல அலுவலகமும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

தமிழகம், பால் உற்பத்தியில் மீண்டும் தனது பழைய நிலையை தக்கவைத்துக்கொள்ள தமிழக அரசு இதுபோன்ற குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

பால் உற்பத்தியில் தமிழகம் இழந்த பெருமையை எடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் பாலின் நிறம் போல உற்பத்தியாளர்களின் முகங்களும் வெண்மை பளிச்சிட புன்னகை பூக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+