காமராஜர் பிறந்த நாள்-கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்: ரூ. 1.33 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திமுக அரசு 2006-ல் பொறுப்பேற்றதும் பெருந்தலைவர் காமராசர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில், அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15ஆம் தேதியைக் கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்து, ஆண்டுதோறும் அந்நாளில் தமிழகத் திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ- மாணவியர் புத்தாடை அணிந்து, விழா எடுத்து, காமராசரின் திருவுருவப்படத்தை அலங்கரித்து, மகிழ்ச்சியுடன் கொண்டாடிட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று முதல்-அமைச்சர் கலைஞர் 24.5.2006 அன்று ஆணையிட்டார்.
அந்த ஆணையைத் தொடர்ந்து, கடந்த மூன்றாண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் என மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது.
அதேபோல, இந்த ஆண்டும் ஜூலை திங்கள் 15ஆம் நாளன்றும் மாணவ- மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராசரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் “கல்வி வளர்ச்சி நாள் விழா" எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடாக 1 கோடியே 8 லட்சத்து 62 ஆயிரத்து 550 ரூபாயும், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து 24 லட்சத்து 58 ஆயிரத்து 200 ரூபாயும் ஆக மொத்தம் 1 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரத்து 750 ரூபாய் அனுமதித்து முதல்-அமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு சரத்குமார் கோரிக்கை..
இதற்கிடையே, காமராஜர் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
கல்வித்துறையில் மாபெரும் புரட்சியையும், சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தி கல்விகண் திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
ஏழை மாணவர்கள் படித்து உயர காரணமாக இருந்த காமராஜர் அனைத்து மாநிலங்களுக்கும் கல்வி புரட்சிக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.
அவரது பிறந்த நாளான ஜூலை 15-ந்தேதியை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications