மின்னணு வாக்கு எந்திரம் வேண்டாம்- வாக்குச் சீட்டுக்கு மாறுவோம்: அத்வானி

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் திரண்டு குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
தமிழகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெருமளவு மோசடிகள் செய்யப்பட்டிருப்பதாக அதிமுக, பாமக ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன. பாமக சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் டெல்லி தலைமை செயலாளர் ஓமேஷ் சைகல், மின்னணு எந்திரத்தில் குளறுபடி நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இப்பிரச்சினை மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
முக்கிய எதிர்கட்சியான பாஜகவும் அடுத்து நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில தேர்தல்களுக்கு வாக்கு சீட் முறையை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பாஜக தலைவர் அத்வானி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
தேர்தல் ஆணையம், மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் எந்த குளறுபடியும் செய்ய முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். இதிலிருக்கும் குறைகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் மீண்டும் பழைய வாக்கு சீட்டு முறைக்கு திரும்பி விடலாம்.
கடந்த தேர்தலில் மின்னணு எந்திரத்தில் குளறுபடி நடந்தது என யாரும் கூறவில்லை. ஆனால், இதிலிருக்கும் குறைகளுக்கு நல்ல தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications