பெட்ரோல் விலை உயர்வால் அதிர்ச்சி - காரை விற்று விட்டு குதிரையில் போகும் தொழிலதிபர்

பார்ப்பதற்கு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல தெரியும் இவரது செயல். ஆனால் குதிரை சவாரியால் பல லாபங்கள் தனக்கு ஏற்படுவதாகவும், இதுதான் பெஸ்ட் வாகனம் என்றும் பெருமையுடன் கூறுகிறார் இந்த தொழிலதிபர்.
அவரது பெயர் சஞ்சய் பாண்டே. நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர். விலை உயர்ந்த சொகுசுக் கார் ஒன்றை வைத்திருந்தார் சஞ்சய். ஆனால் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை ஏறிக் கொண்டே போவதால் காரை விற்று விட்டார்.
அதன் பின்னர் 40 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு குதிரையை வாங்கினார். தற்போது அந்தக் குதிரையில்தான் தனது அலுவலகத்திற்கு தினசரி போய் வருகிறார் சஞ்சய்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது அருமையக உள்ளது. பெட்ரோலுக்காக காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. பெட்ரோல் விலை உயருகிறதே என்று கவலைப்படத் தேவையில்லை. டயர் தேய்ந்து விட்டதே என்று வருத்தப்படத் தேவையில்லை. நம்மால் சுற்றுச்சூழல் மாசடைகிறதே என்று வருத்தப் படத் தேவையில்லை என்கிறார் சஞ்சய்.
குதிரைக்காக தினசரி 40 ரூபாய் மட்டும் செலவழிக்கிறாராம் சஞ்சய். குதிரைக்கான தீவணத்திற்காக இந்த செலவு. ஆனால் வழக்கமாக ஒரு நாளைக்கு பெட்ரோலுக்காக மட்டும் முன்பு ரூ. 150 வரை செலவிட நேரிட்டதாம்.
குதிரை சவாரியால் பணம் மிச்சமாவதோடு, திருப்திரமாகவும் போய் வர முடிகிறதாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications