மட்டக்களப்பில் எல்டிடிஇயுடன் சண்டை - ராணுவ வீரர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான்குளம் பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். ராணுவ வீரர்களைச் சுட்ட விடுதலைப் புலி வீரர், பதில் தாக்குதலில் படுகாயமடைந்தார்.
காயமடைந்த அந்த வீரரை ராணுவம் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று விட்டதாக இலங்கை அறிவித்த பின்னர் நடந்துள்ள முதல் நேரடிச் சண்டை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைப் படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பின் தென்பகுதியில் உள்ள கிரான்குளம் பகுதியில் கடற்பாதையைப் பயன்படுத்தி நேற்று காலை தப்பிச் செல்ல முற்பட்டார்.
அவரது பெயர் மோகன் அல்லது நல்லதரத்திணம் மகேந்திரராஜா எனக் கூறப்படுகிறது. சிறிய படகு மூலம் மோகன் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அதைப் பார்த்த ராணுவம், தடுத்து நிறுத்தியது.
பின்னர் மோகனைப் பிடிக்க அவர்கள் முயன்றபோது மோகன் மின்னல் வேகத்தில் ராணுவ வீரரின் துப்பாக்கியைப் பறித்து சரமாரியாக சுட்டார்.
இதில் ராணுவ வீரர் ஒருவர் அங்கேயே உயிரிழந்தார். இறந்த ராணுவ வீரரைக் காப்பாற்ற விரைந்த இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த ராணுவத்தினர் மோகனை சுற்றி வளைத்து சுட்டுள்ளனர். அப்போது மோகன் படுகாயமடைந்து விழுந்தார்.
இதையடுத்து அவரை மட்டக்களப்பு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குப் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் மூலம் எத்தனை விடுதலைப் புலிகள் அப்பகுதியில் உள்ளனர் என்பதை அறிவதற்காகவே மோகனை கொல்லாமல் காயப்படுத்தி ராணுவத்தினர் உயிருடன் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications