கரூர் அருகே 130 கிலோ கஞ்சா பறிமுதல்
கரூர்: கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாவல் நகர் அருகே ஒரு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாவல்நகர் அருகே ஒரு காரில் சிலர் கஞ்சாவை கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வேன் போலீசாரைக் கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து அந்த வேனை விரட்டிச் சென்ற போலீசார் மடக்கி பிடித்தனர். வேனில் இருந்தவர்கள் போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் வேனை சோதனையிட்ட போது அதில் ரூ. 1 லட்சம் மதிப்புடைய சுமார் 130 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த கஞ்சாவையும், வேனையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications