காதலிக்க மறுத்த மாணவி கொலை-ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்
விஜயவாடா: காதலிக்க மறுத்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி ஒருவரை ஆட்டோ டிரைவர் கடத்தி சென்று கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்துக்கு அருகில் வசித்து வந்த ஏலியா என்பவரின் மகள் ஹெப்சிபா (20). இவர் நோவா என்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டில் இருந்து கல்லூரி வெகு தொலைவில் இருந்ததால் அவர் நேரு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்சில் செல்வது பழக்கம்.
வீட்டில் இருந்து பேருந்து நிலையத்துக்கு தினமும் லிங்கா ரெட்டி என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார். ஹெப்சிபாவின் அழகில் மயங்கிய லிங்கா ரெட்டி ஒரு நாள் அவரிடம் பூங்கொத்து கொடுத்து அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், ஹெப்சிபா, ஆட்டோ டிரைவரின் விருப்பத்தை நிராகரித்து, அவரை கண்டபடி திட்டினார். மேலும், அவரது ஆட்டோவில் செல்வதை அன்றிலிருந்து தவிர்த்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி முதல் ஹெப்சிபாவை காணவில்லை. இதையடுத்து அவரது தந்தை மறுநாள் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் அமராவதி ரோடு அருகை கிருஷ்ணாயாபாலம் என்னும் இடத்தில் உள்ள ஒரு ஏரியில் சாக்குமூட்டைக்குள் ஒரு பெண்ணின் பிணம் இருப்பது தெரிய வந்தது.
போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றினர். அது ஹெப்சிபாவின் பிணம் தான் என்பதை அவரது உறவினர்கள் உறுதி செய்தனர். பின்னர் அவரது மொபைல் கைப்பற்றப்பட்டு அதிலிருந்த எண்களை வைத்து போலீசார், ஆட்டோ டிரைவர் லிங்கா ரெட்டியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த ஆட்டோ டிரைவர், ஹெப்சிபா கல்லூரியில் இருந்து திரும்பி வரும் போது அவரை நைசாக கடத்தி சென்று காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் அவரது உடலை சாக்குமூட்டையில் போட்டு கிருஷ்ணாயாபாலம் ஏரியில் போட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications