ஜலதோஷத்திற்கு மத்தியிலும் விடாமல் பட்ஜெட் உரையை வாசித்த பிரணாப்
டெல்லி: இன்று லோக்சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் வாசிப்பின்போது அடிக்கடி கர்ச்சீப்பை எடுத்து மூக்கைத் துடைத்தபடி இருந்ததைப் பார்த்திருப்பீர்கள். பிரணாபுக்கு ஜலதோஷம். இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் அவர்.
நீண்ட காலத்திற்குப் பின்னர் நிதியமைச்சராகியுள்ள பிரணாப் முகர்ஜி, 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதலாவது பட்ஜெட் உரையை இன்று வாசித்து முடித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ப.சிதம்பரம் பட்ஜெட்டை சமர்ப்பித்து வந்தார். மிகச் சிறந்த வக்கீல் என்பதால் ப.சிதம்பரத்தின் பட்ஜெட் உரை வாசிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்.
பொருத்தமான ஏற்ற இறக்கங்களுடன் படு அழகாக பட்ஜெட் உரையை வாசிப்பார் அவர். ஆரம்பித்தபோது இருந்த வேகம், முடிக்கும் வரையிலும் குறையாமல் இருக்கும்.
மேலும் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோத பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. இதனால் படு தெம்பாக அலங்கார வார்த்தைகளைப் போட்டு வாசித்து முடிக்க வசதியாக இருந்தது.
அதற்காக பிரணாப் முகர்ஜி சிறப்பாக பட்ஜெட் உரையை வாசிக்கவில்லை என்று கூறி விட முடியாது. இன்று அவர் பட்ஜெட் உரையை வாசிக்கும்போது அடிக்கடி கர்ச்சீப்பை எடுத்து மூக்கைத் துடைத்துக் கொண்டபடி இருந்தார். காரணம், அவருக்கு ஜலதோஷம்.
மேலும், பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள காலகட்டம், நிதி சிக்கல் விஸ்வரூபம் எடுத்து டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நேரம். எனவே திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் பார்த்துப் பார்த்து அறிவிக்க வேண்டிய நிலைமை.
இப்படி பல தரப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியில் சேலையும் கிழியாமல் முள்ளும் கையில் படாமல் சேலையை பத்திரமாக எடுக்கும் வேலையை படு லாவகமாக முடித்துள்ளார் பிரணாப்.
பிரணாப் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியபோது பங்குச் சந்தையில் காளையின் பாய்ச்சல் படு வேகமாக இருந்தது. ஆனால் பட்ஜெட் போகப் போக, வீழ்ச்சிக்கு போய் விட்டது பங்குச் சந்தை. பட்ஜெட்டை அவர் வாசித்து முடித்தபோது கிட்டத்தட்ட 800 புள்ளிகள் வரை சரிந்திருந்தது சென்செக்ஸ்.
பங்குச்சந்தையின் எதிர்பார்ப்பை பாபு பிரணாபின் பட்ஜெட் பூர்த்தி செய்யாததே இதற்குக் காரணம்.
பங்குச்சந்தை பார்ட்டிகளுக்கு சாதகமாக பிரணாப் எதுவும் சொல்லவில்லை என்று அவர்கள் வருத்தப்பட்டாலும் கூட, தனி நபர்களுக்குச் சில சந்தோஷங்களை விட்டு வைத்திருந்தார் பிரணாப்.
வருமான வரிச் சலுகைகள், தொழில் துறையினருக்கு சில சலுகைகள், விவசாயிகள், மகளிர் என பல தரப்பினருக்கும் கொஞ்சம் கொஞ்சம் சந்தோஷம் இருந்தது பிரணாபின் பட்ஜெட்டில்.
இந்த பட்ஜெட் நடுத்தர வகுப்பினருக்கு ஓரளவு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மொத்தத்தில் தனது மூக்கையும் பார்த்துக் கொண்டு, நாட்டின் முகத்தையும் பூரிக்க வைக்கும் முயற்சியில், ஓரளவு வென்றுள்ளார் பிரணாப் என்றே சொல்ல வேண்டும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications