சரப்ஜித்துக்கு கருணை-மீண்டும் மனு
லாகூர்: தூக்குக் கயிற்றுக்கு வெகு அருகில் வந்து விட்ட இந்தியர் சரப்ஜித் சிங்குக்குக் கருணை காட்ட வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் புதிதாக கருணை மனு ஒன்றை சிங்கின் வழக்கறிஞர் நாளை மறுதினம் சமர்ப்பிக்கவுள்ளார்.
லாகூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் சரப்ஜித் சிங்.
பல்வேறு முயற்சிகளால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தள்ளிப் போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று கூறி தீர்ப்பளித்து விட்டது.
இதையடுத்து சரப்ஜித் சிங் சார்பில் அதிபரிடம் கருணை மனு தாக்கல் செய்ய அவரது வக்கீல் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சரப்ஜித் சிங்குக்காக ஆஜராக நியமிக்கப்பட்டுள்ள புதிய வக்கீலான ஓவைஸ் ஷேக் கூறுகையில், சரப்ஜித் சிங் எழுதிய கடிதத்துடன் இணைத்து இந்த கருணை மனு சர்தாரிக்கு அளிக்கப்படும்.
இந்த புதிய கருணை மனு புதன்கிழமை அதிபரிடம் வழங்கப்படும். இதற்காக நேரம் கேட்டு விண்ணப்பித்துள்ளேன். தனிப்பட்ட முறையில் அவரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவும் உள்ளேன்.
மனித நேய அடிப்படையில் தன்னை மன்னித்து விடுதலை செய்ய உத்தரவிடக் கோரியும், தனது மனைவி, குடும்பத்துடன் தான் வாழ விரும்புவதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார் சரப்ஜித் சிங் என்றார் ஓவைஸ் ஷேக்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications