நீதிபதிக்கு மிரட்டல்: ராஜாவை நீக்க வேண்டும்-வைகோ
தூத்துக்குடி: மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ராஜா, நீதிபதியை மிரட்ட மற்றொரு அமைச்சரை தூண்டிவிட்டுள்ளார். இதனால் தற்போது ஒட்டுமொத்த கேபினட் குழுவின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பிரதமர் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து அந்த அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
தூத்துக்குடியில் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ஜோயல் தலைமை வகித்தார். மதிமுக துணை பொது செயலாளர் நாசரேத் துரை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வைகோ பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சியினர் வெற்றியை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். இது கிடைத்த வெற்றியல்ல. வாங்கப்பட்ட வெற்றி. இது ஜனநாயகத்தை அழிக்கும் செயல்.
தற்போது மக்களுக்கு தேவை பொருளாதாரம்தான் என்பதை உணர்ந்து அதனை எதிர்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளன. ஒரு தொகுதிக்கு சுமார் ரூ. 30 கோடி வீதம் தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கு ரூ. 1200 கோடி செலவு செய்திருக்கிறார்கள். விருதுநகரில் ரூ. 50 கோடி செலவு செய்து என்னை தோற்கடித்துள்ளார்கள்.
மதிமுக ஓழுக்கத்திலும் கட்டுபாட்டிலும் சிறந்து விங்குகிறது. தேர்தல் தோல்வி நிரந்தரமானது அல்ல. தோல்விக்கு பிறகு நாங்கள் துவண்டு விடவில்லை. அப்படி இருந்திருந்தால் மதிமுக என்றோ சிதைத்திருக்கும். மீண்டும் உயிர்ந்து எழுந்து எழுச்சி பெறுவோம். தோற்றத்தை நாங்கள் நன்மையாக கருதுகிறோம்.
விருதுநகரில் எனது தோல்வி தமிழகம் முழுவதும் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு கட்சியை வளர்க்க வேண்டும்.
மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ராஜா, நீதிபதியை மிரட்ட மற்றொரு அமைச்சரை தூண்டிவிட்டுள்ளார். இதனால் தற்போது ஒட்டுமொத்த கேபினட் குழுவின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பிரதமர் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து அந்த அமைச்சர்களை நீக்க வேண்டும். இல்லையென்றால் மக்களுக்கு ஒட்டுமொத்த அமைச்சரவையின் மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் ஓரே தீர்வு. தனி ஈழம் தொடர்பான போர் இலங்கையில் மீண்டும் தொடரும். அதற்கு பிரபாகரனே மீண்டும் தலைமையேற்று நடத்துவார் என்றார் வைகோ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications