பட்ஜெட்-ரயில்வே பட்ஜெட் மே. வங்கத்திற்கு கூடுதல் நிதி, திட்டங்கள்

சில நாட்களுக்கு முன்பு மமதா பானர்ஜி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அதேபோல பொது பட்ஜெட்டிலும், மேற்கு வங்க மாநிலத்திற்கு ஏராளமான நிதி ஒதுக்கீடுகள், திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.
மமதாவும், பிரணாபும் சேர்ந்து பட்ஜெட்டுகளை மேற்கு வங்க பட்ஜெட்டாக மாற்றி விட்டனர்.
பிரணாப் நேற்று அறிவித்த பட்ஜெட்டில், அய்லா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் கிளை முர்ஷிதாபாத்தில் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதை விட முக்கியமாக மாபெரும் ஜவுளிப் பூங்கா ஒன்றும் மேற்கு வங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முர்ஷிதாபாத் மாவட்டத்திற்குட்பட்ட ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியிலிருந்துதான் பிரணாப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மமதா அறிவித்த பட்ஜெட்டில் ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை, 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல மெகா திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
மேலும், நான்கு நான் ஸ்டாப் ரயில்கள், ஐந்து உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள், கிட்டத்தட்ட 150 மாதிரி ரயில் நிலையங்கள், ஏராளமான புதிய ரயில்கள், புதிய ரயில் இணைப்புகள், நீட்டிப்புகள் என மேற்கு வங்கத்திற்கு அள்ளி வழங்கியிருந்தார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு 1984ம் ஆண்டு நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜியும், ரயில்வே அமைச்சராக கனி கான் செளத்ரியும் இருந்தனர். இருவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். தற்போதும், நிதியமைச்சரும், ரயில்வே அமைச்சரும் (பிரணாப் மற்றும் மம்தா பானர்ஜி) மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இவ்வளவு திட்டங்களையும், நிதிகளையும் தங்களது மாநிலத்திற்கு அள்ளிக் கொண்டு போய் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications