தனியார்மயமாக்கல்: சரியான நேரத்துக்காக காத்திருக்கிறோம்-பிரணாப்
டெல்லி: நிலைமை சரியாகும் வரை அரசின் கட்டுப்பாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படும். சரியான நேரத்தில் மீண்டும் தனியார்மயமாக்கலைத் தொடர்வோம் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு முதல்முறையாக நாளிதழ் ஒன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் பிரணாப் முகர்ஜி.
நேற்றைய பட்ஜெட் அறிவிப்புகளில், அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது இப்போதைக்கு நிறுத்தப்படுவதாகவும், பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த நிறுவனங்களை அரசே தனது முழுப் பொறுப்பிலும் வைத்திருக்கும் என்றும் தெரிவித்தார் இதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. 850 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தன.
இந்த நிலையில் இன்று பேட்டியளித்துள்ள பிரணாப் முகர்ஜி, அரசின் இந்த முடிவு தற்காலிகமானதே என்றும், உரிய நேரம் வரும்போது அரசு முதலீடு விலக்கல் (disinvestment) தொடரும் என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
அரசுத் துறை நிறுவனங்களில் அரசின் முதலீட்டை விலக்கிக் கொள்வது நிச்சயம் நடக்கும். ஆனால் இப்போதல்ல. அரசு தனது முதலீட்டை குறைத்துக் கொண்டு அதில் பொதுமக்களை (அதாவது தனியார் நிறுவனங்களை) பங்கேற்கச் செய்வதில் ஆர்வமாக உள்ளோம். எந்த அளவு குறைப்பது, எந்தெந்த நிறுவனங்களில் முதலீட்டைக் குறைப்பது போன்றவற்றை இனிமேல்தான் தீர்மானிப்போம்.
இப்போதைக்கு நிதி அமைச்சர் என்ற முறையில் என் கவனமெல்லாம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே. குறைந்தபட்சம் 9 சதவிகித வளர்ச்சியையாவது எட்ட வேண்டும். நாட்டில் இந்த ஆண்டு பருவமழை மட்டும் சரியாக அமைந்துவிட்டால், இந்த வளர்ச்சி சாத்தியமே.
உள்நாட்டு வருவாயைப் பெருக்க மத்திய அரசு கூடுதலாக ரூ.60000 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் தேவை அதிகரிக்கும். வர்த்தகம் சூடுபிடிக்கும். அந்நிய வர்த்தகம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள இந்தக் கட்டத்தில் அதைச் சரிகட்ட உள்நாட்டு வர்த்தகத்தை பெருக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அனைத்து மாநில அரசுகளின் தொழில் துறையும் முயற்சி செய்தால் இது சாத்தியமே. இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளிடமும் நான் பேசி வருகிறேன், என்றார் பிரணாப் முகர்ஜி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications