நக்சல் பாதிப்பு மாநில முதல்வர்கள் கூட்டம்-ப.சி. தகவல்
டெல்லி: நக்சலைட் அட்டகாசம் தலை விரித்தாடும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களின் கூட்டம் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளிக்கையில், நக்சலைட் பிரச்சினை உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள், தத்தமது மாநிலங்களில் செயல்படும் நக்சலைட்டுகளை ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
முதல்வர்கள் கூட்டத்தின்போது நக்சலைட் அட்டகாசத்தை ஒழிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு முதல்வர்களிடம் விளக்கப்படும்.
நக்சலைட் பிரச்சினை கடந்த 2 மாதங்களில் மிகப் பெரிய கவலை அளிக்கும் அம்சமாக மாறியுள்ளது உண்மை.
இந்த அட்டகாசத்தை ஒழிக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெளிநாடுகளிலிருந்து நக்சலைட்டுகளுக்கு பணம் வருவது தொடர்பாக போதிய, வலுவான ஆதாரங்கள் இதுவரை இல்லை.
வங்கிகளைக் கொள்ளையடித்தல், கடத்தி வைத்துப் பணம் கேட்டு மிரட்டுதல், உள்ளூர் மக்களின் ஆதரவு உள்ளிட்டவற்றின் மூலம் நமது நாட்டுக்குள்ளேயே அவர்கள் பணத்தை திரட்டிக் கொள்கின்றனர்.
காவல்துறையை நவீனப்படுத்த மாநிலங்களுக்கு ரூ. 1,250 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்றார் ப.சிதம்பரம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications