ஜெ..கலர் டிவி ஊழல் வழக்கு-9-ல் விசாரணை
சென்னை: ஜெயலலிதா ஆட்சியில் பஞ்சாயத்துகளுக்கு கலர் டி.விக்கள் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை 9ம் தேதி தொடங்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 1991-96 அதிமுக ஆட்சியில் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு கலர் டிவிக்கள் வாங்கியதில் ரூ. 10 கோடி அளவுக்கு ஊழல் நடந்தது.
இதுதொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், செல்வகணபதி மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா, நெடுஞ்செழியன், சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
ஹரிபாஸ்கர் உள்ளிட்ட 7 பேருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 10,000 முதல் ரூ. 30,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஹரிபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அதே போல ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பி்ன் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஜூலை 9ம் தேதி தொடங்கும் என்று நீதிபதி எம். ஜெயபால் அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு 9 வருடமாக விசாரணைக்கே வராமல் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications