சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்ததற்காக மனைவியை கொன்ற கணவர்!
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அடுத்தவர் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்ததற்காக தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரைக் கழுத்தை முறித்துக் கொலை செய்து விட்டார் ஒரு நபர்.
நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 60 கொலைகள் நடந்துள்ளன. அதாவது சராசரியாக மாதத்திற்கு பத்து கொலைகள் விழுகின்றன.
பழிக்குப் பழி வாங்குவது, கள்ளக்காதல், முன்விரோதம், திடீர் கோபத்தால் கொலை செய்வது என பல்வேறு காரணங்களுக்காக இந்த கொலைகள் நடந்துள்ளன.
இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அருகே இன்னொருவரின் சைக்கிளில் டபுள்ஸ வந்ததற்காக கோபப்பட்டு மனைவியைக் கொன்று விட்டார் ஒரு ஆத்திரக்கார நபர்.
அம்பை அருகே உள்ளது ஊர்க்காடு. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மகாலட்சுமி. 3 குழந்தைகள் உள்ளனர். மகாலட்சுமி பீடி சுற்றும் வேலை பார்த்து வந்தார். செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார் முருகன்.
சமீப காலமாக தனது மனைவியின் நடத்தை குறித்து முருகனுக்கு சந்தேகம் இரு்நதது. இதனால் அவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஒரு கடைக்குப் பீடி கொடுக்கப் போன மகாலட்சுமி, அந்தக் கடைக்காரருடன் சைக்கிளில் வீட்டுக்கு வந்துள்ளார் போலும். இது முருகன் காதுகளுக்குப் போயுள்ளது.
படு கோபத்துடன் கிளம்பி வந்த முருகன், மனைவியுடன் சண்டை பிடித்துள்ளார். இரவு நெடு நேரம் சண்டை போட்ட பின்னர் தூங்கப் போயினர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை எழுந்த முருகன், தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்தார்.
அதன் பின்னர் நேராக போலீஸில் போய் சரணடைந்தார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications