ரூ. 17 லட்சம் மோசடி - அதிகாரியை நடு ரோட்டில் வைத்து அடித்த பெண்கள்
நாகர்கோவில்: ரூ. 17 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டு தப்ப முயன்ற தனியார் நிறுவன அதிகாரியை நடு ரோட்டில் வைத்து பெண்கள் சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். விரைந்து வந்த போலீஸார் பெண்களின் பிடியிலிருந்து அந்த நபரை மீட்டனர்.
நாகர்கோவிலை அடுத்த கணபதிபுரத்தை சேர்ந்த சாவித்திரி என்பவர் நேற்று 40 பெண்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார்.
அப்போது சாவித்திரி கூறுகையில், ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளராக 2006-ம் ஆண்டு முதல் பணி புரிந்து வந்தேன். அந்த நிறுவனத்தின் மூலம் நல உதவி வழங்குவதாக கூறியதன் பேரில் ஒவ்வொரு ஊரிலும் சபை தொடங்கி அதில் உறுப்பினர்களை சேர்த்து தலா ரூ.1,200 வீதம் வசூல் செய்து தலைமை பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தேன்.
அவர்கள் நல உதவிகள் வழங்குவதாக கூறி ரூ.17 லட்சத்து 4 ஆயிரத்து 37-ஐ பெற்றுக்கொண்டு, இதுவரை நல உதவிகள் வழங்காததால் பணத்தை செலுத்தியவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
ஆகவே பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய 3 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்'' என்று கூறினார்.
இந்த நிலையில் அந்த நிறுவன நிர்வாகிகளில் ஒருவர் நாகர்கோவில் டெர்ரிக் சந்திப்பு அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அந்த பெண்கள் டெர்ரிக் சந்திப்புக்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டு இருந்த நிர்வாகி ஆதிலிங்கத்தை முற்றுகையிட்டனர்.
ஆதிலிங்கத்தை சரமாரியாக தாக்கினர். ஏகப்பட்ட பெண்கள் ஒரு ஆணை சுற்றி வளைத்து அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸாருக்குத் தகவல் போய் விரைந்து வந்தனர்.
ஆவேசத்துடன் காணப்பட்ட பெண்கள் கூட்டத்தில் இருந்து ஆதிலிங்கத்தை மீட்டனர்.
பின்னர் ஆதிலிங்கம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்கள் சாலை மறியலில் குதித்தனர்.
அப்போது ஆதிலிங்கத்தை போலீசார் ஒரு ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். அதைப் பார்த்த பெண்கள் ஆட்டோவை போக விடாமல் தடுத்து மறித்தனர்.
இதையடுத்து போலீஸ் நிலையம் வரை ஆதிலிங்கத்தை போலீசார் நடக்க வைத்து கூட்டிச் சென்றனர்.
பின்னர் 25 பெண்களைக் கைது செய்தனர். அதேசமயம், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆதி லிங்கத்திடம் என்ன நடந்தது என்று கேட்டு எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டனர்.
சம்பந்தப்பட்ட ஆதி லிங்கத்தின் மனைவி தூத்துக்குடியில், தலைமைக் காவலராக இருக்கிறாராம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications