மைக்கேல் ஜாக்சன் உடல் இன்று அடக்கம் - ரசிகர்கள் குவிந்தனர்

லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. இதையொட்டி ரசிகர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் வருவோர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். டிக்கெட் இல்லாமல் வர முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கான டிக்கெட் கோரி ஆன்லைன் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் 17 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பபட்டுள்ளது.
டிக்கெட் கிடைக்காதவர்கள் தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பில் இறுதிச் சடங்குகளைக் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரசிகர்கள் பெருமளவில் கூடி வருவதால் பாதுகாப்புக்காக ஏகப்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் ஏற்பட்டால் தடுக்கவும் போலீஸார் ஆயத்த நிலையில்
வைக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 25ம் தேதி ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 50. அவரது மரணத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவுகின்றன.
அவரது பிரதேப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்னும் கூட வெளியாகவில்லை. இரண்டு முறை அவருக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதையும் தனது இசையாலும், நடனத்தாலும் கட்டிப் போட்ட ஜாக்சன் இன்று நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டு பிரிகிறார். இதனால் அவரது கோடானு கோடி ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications