கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் பதவி நீட்டிப்பு
டெல்லி: சென்னை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரனின் பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாதாட ஒவ்வொரு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசால் சொலிசிட்டர் ஜெனரல் நியமிக்கப்படுகிறார்.
இந்நிலையில் நேற்று மத்திய அரசு 12 சொலிசிட்டர் ஜெனரல்களை நியமித்தது. இவர்களில் 7 பேர் உச்ச நீதிமன்றத்திலும், 5 பேர் பல்வேறு உயர் நீதிமன்றத்திலும் அரசுக்காக வாதாட இருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருக்கும் ரவீந்திரனின் பதவிக்காலம் மேலும் மூன்ற ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2008ல் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ரவீந்திரன் தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார்.
கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திர உயர் நீதிமன்றங்களின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக வாதாடும் பொறுப்பு அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர் இந்த நான்கு மாநில உயர் நீதிமன்றங்களிலும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் 248 அரசு துறைகளுக்கு ஆதரவாக வாதாடுவார்.
பிரபல வக்கீலான ரவீந்திரன், மோகன் குமாரங்கலத்திடம் ஜூனியராக வேலை பார்த்தவர். 1963 முதல் காங்கிரஙஸ் கட்சியில் இருக்கும் இவர் காமராசர், பக்தவச்சலம், கக்கன், ஜிகே மூப்பனார் உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகியவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications