திமுக மாஜி அமைச்சர் ராஜாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்
ஈரோடு: 15க்கும் மேற்பட்ட குடும்பங்களை இடத்தை காலி செய்யுமாறு முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் ஆட்கள் மிரட்டியதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஈரோடு கவுந்தப்பாடி அருகே உள்ளது எல்லீஸ் பேட்டை.
இங்கு பல ஆண்டுகளாக 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலத்தை, தற்போது முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. .
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா - வின் ஆட்கள் அப் பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் இடத்தை காலி செய்யுமாறு அச்சறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆவேசம் அடைந்த அப் பகுதி மக்கள் என்.கே.கே.பி. ராஜாவும், அவரது ஆட்களும் தங்களை மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, அப்பகுதி மக்களுடன் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு
செய்து தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனால் இது வரை எந்த வித மாற்று ஏற்பாடும் செய்து தரவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கவுந்தபாடி சாலையில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே. பி. ராஜாவின் கல்லூரிக்கு அருகில் சாலையோரத்தில் சமையல்
செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொது மக்கள் கலைந்து
சென்றனர்.
திங்கள் கிழமைக்குள் இந்த பிரச்சனையில் உரியநடவடிக்கை எடுக்காவிட்டால், சாலையின் நடுவில் உட்கார்ந்து சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக
எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தை ராஜா அபகரிக்க முயன்றாகவும், அந்தக் குடும்பத்தினரை கடத்திச் சென்று மிரட்டியதாகவும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சர்ச்சையால்தான் ராஜாவின் பதவி பறிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications