தவறாக பயன்படுத்தப்படும் வன்கொடுமை சட்டம்!
நெல்லை: நெல்லையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். பொய் வழக்குகள் போடுகிறார்கள் என மக்கள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி டிபேன் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு தட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்ட களம் அமைப்பின் இயக்குனர் பரதன் மீது போலீசார் முன்விரோதம் காரணமாக பொய் வழக்கு போட்டுள்ளனர். இது தொடர்பாக ஐ.நா. மற்றும் மனித உரி்மை அமைப்பினரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொய் வழக்கை வாபஸ் பெற கோரியும், அதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், போஸ்டர் பிரச்சாரம் உடனடியாக தொடக்கப்படும்.
பின்னர் ஒரு வாரம் தொடர் ஆர்பாட்டம் நடத்தவும், வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி மாநில அளவில் மனித உரிமை காப்பாளர் மாநாடு மற்றும் பேரணியை நெல்லையில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களினால் கொலைகள் அதிகமாக நடந்து வருகிறது. சட்டங்களை முறையாக அமுல்படுத்தி நேர்மையான போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் இந்த கொலைகளை தடுக்கலாம். நீண்ட காலமாக ஒரே பகுதியில் பணியாற்றும் போலீசாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
சில பகுதிகளில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்தி பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. சட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications