சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடு வரலாம்!
சென்னை: லாரி வாடகையை உயர்த்தக் கோரி பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வரலாம்.
சென்னை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இந்தியன் ஆயில் காப்பரேசன் எண்ணெய் கிடங்குகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் நகருக்குள்ளும் வெளியூர்களுக்கும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவை சப்ளை செய்யப்படுகின்றன.
இந்த லாரிகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய புதிய டெண்டர் விடப்பட்டிருந்தது. தற்போது டீசல் விலை உயர்ந்துள்ளதால், டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தரப்படும் வாடகையை இரு மடங்காக உயர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் தொடரும் நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள், டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டது.
லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் சென்னையிலும் அருகாமை நகர்களிலும் பங்குகளில் பெட்ரோல்-டீசல் தட்டுப்படு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications