சென்னையில் மேலும் 2 பேருக்கு 'ஸ்வைன் ப்ளூ'
சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த இரண்டு பேருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகத்தில் உள்ள 135 நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோயினால் சுமார் 94 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 429 பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய 34 வயதான பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஸ்வைன் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் சோதனைக்கு டெல்லி அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஸ்வைன் ப்ளூ அறிகுறியுடன் இந்த மருத்துவமனையில் சுமார் 15 பேர் சோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் சென்னையை சேர்ந்த கணவன், மனைவி இருவருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 164 பேருக்கு...
இந்நிலையில் நேற்று இந்தியா முழுவதும் மேலும் 7 பேருக்கு ஸ்வைன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார துரை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
நேற்று டெல்லியை சேர்ந்த மூவருக்கும், கோவா, ஹைதராபாத், பெங்களூரை சேர்ந்த தலா ஒருவருக்கும் ஸ்வைன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் இதுவரை 1040 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 164 பேருக்கு ஸ்வைன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிகிச்சைக்கு பின் 114 பேர் வீடு திரும்பிவிட்டனர் என கூறியுள்ளது.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications