"ரொம்ப ரிஸ்க்.." அமீரக விமானங்களுக்கு மொத்தமாக தடை? மத்திய அரசுக்கு பறந்த கடிதம்! என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

துபாய்: வளைகுடாவில் மீண்டும் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை வளைகுடா நாடுகளுக்கு விமானங்களை இயக்கக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வளைகுடாவில் மீண்டும் இப்போது போர் வெடித்துள்ளது. அமெரிக்காவும் ஈரான் மாறி மாறி தாக்குதலை ஆரம்பித்துள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது. இதற்கிடையே இந்திய விமானிகள் சங்கம் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளது.

India Dubai UAE flights

கோரிக்கை

அதாவது மத்திய கிழக்கு பகுதியில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை அங்கு விமானங்களை இயக்கக்கூடாது என விமானிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு மற்றும் இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரக தலைவர் விர் விக்ரம் யாதவுக்கு நேற்று கடிதத்தையும் எழுதியுள்ளனர்.

சீராக இல்லை

அந்தக் கடிதத்தில், "துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் நிலைமை சீராக இல்லை. வளைகுடாவில் தொடரும் ராணுவ பதற்றம் காரணமாக சிவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் செல்லும் விமானங்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது. ஜிபிஎஸ் GPS சிக்னல் பாதிப்பு, திடீர் வான்வெளி கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு அபாயங்களை உள்ளன.

இதுபோன்ற சூழலில் ஒரு சிறிய தவறான தகவல் கூட பேரழிவை ஏற்படுத்தக்கூடும். எனவே பாதுகாப்பு அமைப்புகள், அங்கு பாதுகாப்பை 100% உறுதி செய்யும் வரை துபாய், அபுதாபி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்" என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பின்னணி

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த எட்டு நாட்களாக மீண்டும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் முழு வீச்சில் போர் வெடிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல சர்வதேச விமான நிறுவனங்கள் வளைகுடாவை தவிர்த்து மாற்று வழித்தடங்களில் விமானங்களை இயக்கி வருகின்றன. இதனால் பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள்

மறுபுறம் இந்திய விமான நிறுவனங்களுக்கு வளைகுடா நாடுகள் மிக முக்கியமான சந்தையாக உள்ளன. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, அலாஸ்கா, உள்ளிட்ட நிறுவனங்கள் தினசரி பல விமானங்களை துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் பிற வளைகுடா நகரங்களுக்கு இயக்குகின்றன. இந்தியாவின் சர்வதேச பயணிகளில் சுமார் 50 சதவீதம் பேர் வளைகுடா நாடுகள் வழியாகவே பயணம் செய்கின்றனர். மேலும் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா செல்லும் பயணிகளுக்கும் வளைகுடா வழியாகவே லே ஓவர் செய்து பயணிக்கிறார்கள்.

போர் காரணமாக பிப்ரவரி மாதம் முதலே பல இந்திய நிறுவனங்கள் வளைகுடா நாடுகளுக்கு தங்கள் விமான சேவையை ரத்து செய்திருந்தன. கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்பு தான் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டன. இந்தச் சூழலில் தான் மீண்டும் தாக்குதல்களை குறிப்பிட்டு, விமான சேவையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+