ஒபாமாவுடன் மன்மோகன் சந்திப்பு, எகிப்தில் கிலானியை சந்திப்பார்?

உலக பொருளாதார தேக்கம், தீவிரவாதம், பருவ நிலை மாற்றம் போன்றவை பற்றி இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.
முன்னதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் ஆகியோரையும் மன்மோகன் சிங் சந்தித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய மன்மோகன் சிங்,
உலகளாவிய பொருளாதார சிக்கலால் வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். வளரும் நாடுகளின் ஏழ்மை நிலையை ஒதுக்கி தள்ளிவிட்டு பருவ மாற்றம் குறித்த பிரச்சனைகளை கவனிக்க முடியாது.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் யுக்திகள் உருவாக்கப்படுவது அவசியம். பருவ மாற்றத்தை எதிர்கொள்வதில் தொழில்நுட்பத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
எனவே, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையுடன் இணைந்து பருவ நிலை மாற்றம் தொடர்பான தொழில்நுட்ப மேம்பாடு குறித்த மாநாட்டை இந்தியா நடத்தும்.
வரும் அக்டோபர் 22ம் தேதி டெல்லியில் இந்த மாநாடு நடக்கும் என்றார்.
எகிப்தில் மன்மோகன்-கிலானி சந்திப்பு?:
இந் நிலையில் அணி சேரா நாடுகளின் 15வது உச்சி மாநாடு எகிப்து நாட்டின் சாம்-அல்-சேக் நகரில் அடுத்த வாரம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் பங்கேற்கின்றனர்.
அப்போது இருவரும் சந்தித்துப் பேசுவர் என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்களும் இது தொடர்பாகப் பேசி தேதி-நேரத்தை முடிவு செய்வர் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications