அடிப்படைக் கட்டமைப்புத் திட்ட அமலாக்கத்தைக் கண்காணிக்க மன்மோகன் தலைமையில் கமிட்டி
டெல்லி: பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்றம் கொடுக்கும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களை விரைவாக அமல்படுத்தவும், அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 12 பேர் கொண்ட அமைச்சரவைக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்த ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை விரைவாக அமல்படுத்தவும், அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், பிரதமர் தலைமையில் ஒரு உயர் மட்ட கேபினட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மின்சாரம், ரயில்வே, சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், நீர்ப்பாசனம், வீட்டு வசதித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஊரக வீட்டு வசதித் துறை, நகர்ப்புற குடிசை மாற்று திட்டங்கள் உள்ளிட்டவற்றில், ரூ. 150 கோடிக்கும் மேலான அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்ளையும் இந்தக் கமிட்டி பரிசீலித்து முடிவுகளை எடுக்கும்.
இந்தக் கமிட்டியில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சரத் பவார், மமதா பானர்ஜி, சுஷில் குமார் ஷிண்டே, பரூக் அப்துல்லா, ஜெய்பால் ரெட்டி, கமல்நாத், ஏ.ராஜா, சி.பி.ஜோஷி, செல்ஜா, ஜி.கே.வாசன், பவன் குமார் பன்சால் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தவிர திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, அமைச்சர்கள் பிரபுல் படேல், பிருத்விராஜ் சவான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இருப்பார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications