பிளை துபாய் விமான சேவையில் ஆரம்பத்திலேயே சறுக்கல்
Subscribe to Oneindia Tamil

தொழில்நுட்பக் கோளாறுகளால் துபாய் - லக்னோ விமான சேவை தள்ளிப் போயுள்ளது. பிளை துபாய் நிறுவனம் நாளை முதல் தனது இந்திய சேவையை தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில், இந்த தள்ளிவைப்பு முடிவு வெளியாகியுள்ளது.
பிளை துபாய் நிறுவனத்தின் இன்னொரு சேவை துபாய் - கோவை இடையே வருகிற 14ம் தேதி தொடங்குவதாக இருந்தது. சண்டிகருக்கு ஜூலை 23ம் தேதிக்கு சேவை தொடங்கவிருந்தது.
ஆனால் இந்த மூன்று சேவைகளையும், எதிர்பாராத தொழில்நுட்பக் காரணங்களால், தள்ளி வைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கைத் அல் கைத் கூறியுள்ளார்.
இந்த விமானங்களில் பயணிக்க காத்திருந்த பயணிகளுக்கு இது மிகவும் அசவுகரியத்தைக் கொடுக்கும். இதற்காக வருந்துகிறோம். மன்னிப்பும் கோருகிறோம்.
டிக்கெட் எடுத்த அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும் என்றார் கைத்.












Click it and Unblock the Notifications