தமிழக மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகள்
சென்னை: தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகளை வழங்கவும், அவர்களது படகுகளைப் பதிவு செய்யும் நடைமுறையைக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சட்டசபையில் தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கூறுகையில், கடலோர மாநிலங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுறுவல் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதால் இந்த நடவடிக்கைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக முன்னோடித் திட்டமாக தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள மீனவர்களுக்கு பயோமெட்ரிக் முறையிலான அடையாள அட்டைகளை வழங்கவும், படகுகளைப் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
தமிழக மீனவர்களுக்கு தமிழக அரசும் ஸ்மார்ட் கார்டுகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த கார்டுகளில், ஒவ்வொரு மீனவர் குறித்த அனைத்து விவரங்கள், குடும்பத்தினர் குறித்த விவரம் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.
முதல் கட்டமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ரூ. 20 லட்சம் செலவில் இந்தத் திட்டம் இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றார் சாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications