முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

St George fort
சென்னை: முதல்வர் அலுவலக தனிப் பிரிவுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோட்டை வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு பொதுமக்கள் குறைகளை விளக்கி மனு அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்திற்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜெயசீலன் என்ற பெயரில் இந்த மிரட்டல் வந்தது.

அந்த மெயிலில், சென்னை விமான நிலையம், துறைமுகம் மற்றும் முக்கியமான கட்டிடங்கள் போன்றவற்றில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குறி வைத்து தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளோம்.

வருகிற 16-ந்தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குண்டுகள் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள். என்னையும் பிடித்துப்பாருங்கள் என்று கூறப்பட்டிருந்தது.

ஜெயசீலன் என்ற பெயருக்கு அருகே தொலைபேசி எண்ணும் இருந்தது. அந்த எண் சேலத்தைச் சேர்ந்தது. அதைத் தொடர்பு கொண்ட போலீஸார், அந்த எண்ணுக்குரிய ஜெயசீலனுடன் பேசினர்.

சேலம் போலீஸார் அவரிடம் நேரில் விசாரணை நடத்தியபோது மெயிலை அவர் அனுப்பவில்லை என்று தெரிந்தது. ஜெயசீலனின் எதிரிகள் யாரோ சிலர் வேண்டும் என்றே இந்த மிரட்டல் மெயிலை அனுப்பியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து எந்த ஊரிலிருந்து மெயில் வந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் சென்னையிலிருந்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பிரவுசிங் மையத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியதில் மெயிலை அனுப்பியவர் குறித்துத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

இத்தகவலைத் தெரிவித்த மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+