மெட்ரோ பாலம் இடிந்த விவகாரம்-ஸ்ரீதரன் ராஜினாமா நிராகரிப்பு

மெட்ரோ ரயில்களை நிர்மானிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் ஸ்ரீதரன். இவரது நேரடிப் பார்வையில்தான் டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் உருவானது.
இந்த நிலையி்ல் நேற்று லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே பாலம் இடிந்து விழுந்து 6 பேர் இறந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
இதைத் தொடர்ந்து இதற்கு தானே முழுப் பொறுப்பேற்பதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்தாகவும அறிவித்தார் ஸ்ரீதரன்.
ஆனால் இதை ஷீலா தீக்ஷித் நிராகரித்து விட்டார். இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், மெட்ரோ தலைவர் ஸ்ரீதரனின் ராஜினாமாவை நான் ஏற்கப் போவதில்லை.
அவரது சேவை டெல்லி மெட்ரோவுக்கு தொடர்ந்து தேவை. டெல்லிக்கு மட்டுமல்லாது நாடு முழுவதும் அவர் மிகச் சிறப்பான சேவையாற்றியவர். எனவே அவரது ராஜினாமாவை நிச்சயம் ஏற்க முடியாது என்றார் தீக்ஷித்.
இதற்கிடையே நேற்று பாலம் இடிந்து விழுந்த பகுதியை நேரில் பார்வையிட்டார் ஸ்ரீதரன். தேவையான அறிவுரைகளையும் அவர் சைட் என்ஜீனியர்களுக்கு வழங்கினார்.
பாலத்தில் மீண்டும் விபத்து..
இந் நிலையில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில் இன்று மீண்டும் ஒரு விபத்து நடந்தது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடு்த்தப்பட்ட இரண்டு கிரேன்கள் நொறுங்கி விழுந்தன. இதில் யாரும் உயிரிழக்கவில்லை.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications