சட்டீஸ்கரில் மாவோ தாக்குதலில் எஸ்.பி. உள்பட 36 போலீஸார் பலி

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாவட்ட எஸ்.பி. உள்பட 36 போலீஸார் கொல்லப்பட்டனர்.

மாவோயிட்களிடம் சிக்கித் தவிக்கும் மாநிலங்களில் ஒன்று சட்டீஸ்கர்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கோன் மாவட்டம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆகும். இந்த மாவட்டத்தில் மதன்வாடா என்ற கிராமத்தில் உள்ள போலீஸ் முகாம் மீது நேற்று காலை மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீஸார் கொல்லப்பட்டனர்.

தகவல் கிடைத்ததும். எஸ்.பி. வினோத் குமார் தலைமையில் போலீஸார் விரைந்தனர்.

அப்போது மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் அவர்கள் வந்த வாகனம் சிக்கியது. மேலும் சாலையோரம் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.

இதில் வினோத் குமார் உள்பட 34 போலீஸார் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு மாநில உள்துறை அமைச்சர் நன்கிராம் கன்வார், டிஜிபி உள்ளிட்டோர் விரைந்தனர்.

அந்த பகுதி முழுவதும் சல்லடை போட்டு, தப்பி ஓடிய மாவோ தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+