விஷமப் பேச்சு: வருண் மீது சார்ஜ் ஷீட் ரெடி
லக்னோ: முஸ்லீம்களுக்கு எதிராக துவேஷமாக பேசியது தொடர்பான வழக்கில் பாஜக எம்.பி. வருண் காந்தி மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
மார்ச் மாதம் பிலிபித் தொகுதியில் நடந்த கூட்டத்தின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக துவேஷமாக பேசினார் வருண் காந்தி என்பது வழக்கு.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார் வருண் காந்தி.
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தயாராகி விட்டது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125, மத அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே விரோதத்தை தூண்டுதல் மற்றும் பல்வேறு ஐபிசி பிரிவுகளின் கீழ் வருண் காந்தி மீது குற்றச்சாட்டு தாக்கல் செய்ய உ.பி. அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாம்.
வருண் காந்தி மீதான குற்றப்பத்திரிக்கையை கோர்ட்டில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications