தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதியில்லை!
சென்னை: தமிழகத்தில் அகலப்பாதை பணிகளுக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம் எழுதவுள்ளதாகத் தெரிகிறது.
அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பட்டை நாமம் சாத்தப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் புதிய திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்காதது மட்டுமல்லாமல், நடந்து கொண்டிருக்கும் திட்டப் பணிகளுக்குக் கூட உரிய நிதி ஒதுக்கப்படவில்லை,
குறிப்பாக அகலப் பாதை பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் அந்தப் பணிகள் முடங்கவுள்ளன.
மீட்டர் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணிகளுக்கு மட்டும் ரூ. 611 கோடி நிதியை தென்னக ரயில்வே கோரியிருந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் ரூ. 245 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 234.80 கோடி நிதியில் இப்போது ரூ. 10 கோடி மட்டுமே மிச்சமுள்ளது.
இந் நிலையில் இப்போதைய பட்ஜெட்டிலும் போதிய நிதி ஒதுக்கப்படாததால் தமிழக அகலப்பாதை பணிகள் முடங்கிப் போகவுள்ளன.
இதையடுத்து கூடுதல் நிதி கோரி ரயில்வே வாரியத்துக்கு கடிதம் அனுப்ப தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் சுமார் 1000 கி.மீ. மீட்டர் கேஜ் பாதைகள் அகலப் பாதைகளாக மாற்றப்பட வேண்டியுள்ளது. இதற்கு ரூ. 2,700 கோடி தேவையாம். ஆண்டுக்கு ரூ. 500 கோடி என்று ஒதுக்கினால் கூட பணிகள் முடிவடைய 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம்.
வெளுத்து வாங்கிய அதிமுக எம்பி...
இந் நிலையில் மாநிலங்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி. பாலகங்கா பேசுகையில்,
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் மீது சொற்ப கவனமே செலுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மட்டும்தான் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அதிகளவில் உள்ளன. இவற்றை அகலபாதையாக மாற்ற வேண்டும்.
விழுப்புரம்- தஞ்சாவூர் அகல ரயில் பாதை பணி 1998-99ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2007ம் ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் முடிந்தபாடில்லை.
விழுப்புரம்- காட்பாடி அகல ரயில் பாதைத் திட்டம் 2001ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2007ம் ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில் 10 கிலோ மீட்டர் தூரம்தான் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பணியை உடனடியாக முடிக்க வேண்டுமென அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்.
சேலம்- கரூர் புதிய ரயில் பாதைத் திட்டம் 1996-97ம் ஆண்டு ரூ. 613 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 12 வருடம் கழிந்த பின்னரும் 50 சதவீதம் தொகை கூட இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படவில்லை.
திருவள்ளூர்- அரக்கோணம், சென்னை- பீச்- கொருக்குப்பேட்டை ஆகிய இருவழிப் பாதை திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும். இத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், சென்னை மாநகரத்தை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் பயனனடைவார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications