வி.சி ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள்-திருமா
செங்கல்பட்டு: விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள் அமைப்பு என்று திருமாவளவன் கூறினார்.
செங்கல்பட்டில் நடந்த ரெட்டமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,
தமிழக அரசியல் வரலாற்றில் அம்பேத்கர் வழியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு சிதம்பரம் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றது, ஒட்டு மொத்த விடுதலைச் சிறுத்தைகளை நெஞ்சை நிமிர செய்துள்ளது. பெரியார், பிறக்காத மண்ணில் தலித்துகள் மிகப்பெரிய சக்தியாக விளங்குகின்றனர். ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் தலித்துகள் ஆள முடியாத சூழ்நிலை உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் எழுச்சிக்கு பின்னர், போராட்டத்தின் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் மகிழ்ச்சி இல்லை. விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் 2,797 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றோம்.
ஈழத்தில் நம் தமிழ் இனம் கொன்று ஒடுக்கப்பட்டனர். அந்த துக்கம் இன்னும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனை எண்ணி பார்க்கும்போது என் இதயம் குமுறுகிறது. தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் கையாலாகமல், கை கட்டி வேடிக்கை கும்பலாக இருக்கிறோம்.
ஈழத்தில் கடந்த 5 மாதங்களில் சொல்ல முடியாத சொற்களாலும் விமர்சிக்க முடியாத இன அழிப்பை ராஜபக்சே அரசு செய்துள்ளது.
யார் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தோமோ அவர்களே தமிழர்களை கொன்று குவிக்க உதவுகிறார்கள். நாம் விளம்பரத்திற்காக போராடவில்லை. உள்ளத்தில் ஏற்பட்ட காயம், கொந்தளிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் மறைமலை நகரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.
எம்.ஜி.ஆர். காலத்திற்கு பிறகு அதிமுகவை வழி நடத்தும் ஜெயலலிதா, ஈழத் தமிழர்களுக்கு ஒருநாளாவது குரல் கொடுத்ததுண்டா?. தேர்தல் சமயத்தில் மட்டும் தமிழர்களுக்காக அவர் குரல் கொடுப்பதில் எந்த நியாயமும் இல்லை.
ஈழத் போர் முடிவு பெறவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள் என்றார் திருமா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications