வட்டி உயரும்... மிரட்டும் அரசு வங்கிகள்!

வட்டி விகிதம் எக்காரணம் கொண்டும் உயர்த்தப்படாது என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக் கிழமை அறிவித்த, நிலையில், அவரது அறிவிப்பை மறுக்கும் விதமாக ஓபி பட் தன்னிச்சையாக பேட்டியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'இது கடன் சீஸன் என்பதால் இந்த தருணத்தில் வட்டி உயர்வு தவிர்க்க முடியாதது' என்று கூறியுள்ள பட், 'இன்றைய சூழலில் பட்டியலிடப்பட்ட பெரிய நிறுவனங்களின் செலவில் 8 முதல் 9 சதவிகிதம் அளவுதான் வரும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அது ஒரு பெரிய சுமையே அல்ல', என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இந்த வட்டி உயர்வு பொதுமக்களை எந்த அளவு பாதிக்கும் என்பதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை.
ரிசர்வ் வங்கி இதுகுறித்து ஏதும் அறிவிக்கும் முன்னர் வணிக வங்கிகள் தாங்களாகவே வட்டி உயர்வு குறித்துப் பேசியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. கடந்த ஓராண்டு காலமாக வட்டி விகிதத்தை கணிசமாக குறைக்குமாறு ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் தொடர்ந்து வணிக வங்கிகளுக்கு அறிவுறுத்தி வந்துள்ளன. ஆனால் அதைக் காதிலேயே வாங்கவில்லை எந்த வங்கியும்.
சமீபத்தில் பதவியேற்ற கையோடு, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இந்த அறிவுரையை வங்கிகளுக்கு வழங்கினார். மக்கள் நலத் திட்டங்களைக் கெடுத்துவிடாதீர்கள்; நிறைவேற உதவுங்கள் என்று வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார். இதுகுறித்து ஒரு சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அனைத்து அரசு வங்கி தலைமை நிர்வாகிகளுடனும் பேச்சு நடத்தியும் பார்த்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்தான், இனி வட்டி விகிதம் உயராமல் பார்த்துக் கொள்வோம். அதற்கேற்ப நிதி கையாளப்படும் என்று அறிவித்தார் பிரணாப் முகர்ஜி.
அவர் அப்படி அறிவித்த அடுத்த ஒரு நாளில் ஓபி பட் தன்னிச்சையாக வட்டி உயர்வு அறிவிப்பை திங்களன்று வெளியிட்டுள்ளார்.
நிதி நிர்வாகம் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் யார் கையில் உள்ளது...? ரிசர்வ் வங்கியிடமா... நிதி அமைச்சகத்திடமா... அல்லது இவர்களையும் தாண்டிய சூப்பர் பவர்களாக செயல்படும் இந்த வணிக வங்கி நிர்வாகிகளிடமா?
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications