ஆகஸ்ட் 9ல் திருவள்ளுவர் சிலை திறப்பு: கன்னட அமைப்புகள் எதிர்ப்பு
பெங்களூர்: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் குதித்துள்ளன.
பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 9ல் திறந்து வைக்கிறார்.
அதேபோல சென்னை அயனாவரத்தில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆகஸ்ட் 13ம் தேதி திறந்து வைக்கிறார்.
இந் நிலையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து கன்னட கலாசார சங்கம் மற்றும் ஜெய் கர்நாடகா அமைப்பு ஆகியவவற்றைச் சேர்ந்தவர்கள் மல்லேஸ்வரம் தேவய்யா பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசு நிறைவேற்றி வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்த வேண்டும், இது தொடர்பாக இரு மாநில அரசுகளும் கூட்டு சர்வே நடத்த வேண்டும். அதுவரை பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது.
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்னைக்குத் தீர்வு கண்ட பிறகே திருவள்ளுவர் சிலைத் திறக்கலாம் என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
சிலை திறப்பு-கருணாநிதி அதிகாரப்பூர்வ அறிவி்ப்பு:
இதற்கிடையே பெங்களூரில் மூடிக் கிடக்கும் திருவள்ளுவர் சிலை ஆகஸ்ட் 9ம் தேதி திறக்கப்படும் என்று இன்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கருணாநிதி அவை விதி எண் 110-ன் கீழ் ஒரு அறிக்கை படித்தார்.
வர் கூறுகையில், இரு மாநில அரசுகளும் ஒப்புக் கொண்ட வகையில் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அன்று பெங்களூர் சென்று நானும், கர்நாடக மாநில முதல்வரும் கலந்து கொள்ளும் விழாவில் திருவள்ளுவர் சிலையினை அங்கே திறப்பதென்றும்
அது போலவே ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடக முதல்வர் எதியூரப்பா சென்னைக்கு வந்து நானும் அவரும் கலந்து கொள்ளும் விழாவில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையினை இங்கே திறந்து வைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு மாநிலங்களைச்சேர்ந்த இரு பெரும் சான்றோர்களையும், கௌரவிக்கும் வகையில் இந்த விழாக்கள் இரு மாநிலங்களின் ஒப்புதலோடு நடை பெறுவது இரு மாநில மக்களிடையேயும், அரசுகளிடையேயும் நல்லுறவை ஏற்படுத்த வழி வகுக்குமென்று நம்புகிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications