மும்பையிலும் மெட்ரோ இரும்புத் தூண் விழுந்தது
மும்பை: மும்பையின் புறநகர்ப் பகுதியான சாகினேதா என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின்போது ஒரு இரும்புத் தூண் சரிந்து விழுந்தது.
டெல்லியைத் தொடர்ந்து மும்பையிலும் மெட்ரோ திட்டப் பணியின்போது நடந்த இந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த காற்று காரணமாக இரும்புத் தூண் விழுந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.
இதுகுறித்து மும்பை மெட்ரோ ஒன் திட்ட இயக்குநர் கே.பி.மகேஷ்வரி கூறுகையில், இது தற்காலிக இரும்புத் தூண்தான். கட்டுமானப் பணியின்போது இது வைக்கப்படுவது வழக்கம். பலத்த காற்றின் காரணமாக இது விழுந்து விட்டது.
இதனால் ஏற்பட்ட இடிபாடுகள் 3 மணி நேரத்தில் அகற்றப்பட்டு விட்டன. தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
அந்தேரி - கட்கோபர் இடையிலான பாலம் அமைக்கும் பணியின்போது இந்த விபத்து நடந்தது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
மும்பையில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications